உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடியில் சேதமடைந்த நிலையில் போலீஸ் குடியிருப்பு

சாயல்குடியில் சேதமடைந்த நிலையில் போலீஸ் குடியிருப்பு

சாயல்குடி: சாயல்குடியில் போலீஸ் ஸ்டேஷன் அருகே 25 வீடுகள் கொண்ட பழைய போலீஸ் குடியிருப்பு கட்டடம் உள்ளது.கடந்த 1967ல் கட்டப்பட்ட சேதமடைந்த கட்டடம் 20 ஆண்டுகளாக எந்த பராமரிப்பும் இல்லாததால் 22 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசார் தனியார் கட்டடங்களில் குடியிருக்கின்றனர். வளர்ந்து வரும் நகரமாக உள்ள சாயல்குடியில் போலீசார் கூடுதல் வாடகை கொடுத்து வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களில் இருந்து டூவீலர்களில் வந்து பணி செய்கின்றனர். எனவே போலீசாரின் நலன் கருதி சேதமடைந்த பராமரிப்பு இல்லாத குடியிருப்பு கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய போலீஸ் குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி