உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சோளப்பயிர்களை சேதப்படுத்திய மான்கள்

சோளப்பயிர்களை சேதப்படுத்திய மான்கள்

கமுதி: கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் செழித்து வளர்ந்துள்ள சோளப் பயிர்களை மான்கள் சேதப்படுத்தின.கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் 200 ஏக்கருக்கும் மேல் நெல், மிளகாய், சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் விவசாயம் செய்கின்றனர்.பருவமழை பொய்த்ததால் நெல், மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டது. சிறுதானியப் பயிர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதால் கம்பு, சோளப் பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில் இரவு நேரங்களில் மான்கள் கூட்டமாக வந்து சோளப் பயிர்களை சேதப்படுத்துகின்றன. தற்போது பயிரிடப்பட்டுள்ள சோளப் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.இதனால் நன்கு வளர்ச்சி அடைந்த பயிர்கள் வீணாகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ