மேலும் செய்திகள்
அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
30-Oct-2025
ராமநாதபுரம்: அரசு ஊழியர்களை தாக்குவோரை குண்டர் தடுப்பு சட்டத்தில்கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின்ராமநாதபுரம் மாவட்ட பேரவை கூட்டம் சங்க அலுவலக கட்டடத்தில் நடந்தது. மாவட்டத்தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் அப்துல் நஜ்முதீன், மாவட்ட இணைச்செயலாளர் முத்துச்சாமி, துணைத் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி அவர்களை தாக்குவோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும்வட்ட தலைநகரில் அரசு குடியிருப்புகள் ஏற்படுத்த வேண்டும்.காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 8 கி.மீ., சென்று பணிபுரியும் சாலைப்பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம் வாகன நிறுத்தும் இடத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி நன்றி கூறினார்.
30-Oct-2025