உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலவலக வளாகத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் மாநில துணைத்தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கம் மாவட்டச் செயலாளர் அப்துல் நஜ்முதீன், முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மண்டல இணைப் பதிவாளர் ஜினு ஊழியர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இடையூறு செய்கிறார். புரோக்கர்களின் பேச்சை கேட்டு ஊழியர்களை பழிவாங்குவதாக புகார் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். சங்க மாவட்ட இணை செயலாளர் வேல்முருகன், பொருளாளர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள், கூட்டுறவு ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி