உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதுக்கரை செல்லும் வழியில் வழிகாட்டி பலகை இல்லாததால் வெளி மாவட்ட பக்தர்கள் திணறல்

சேதுக்கரை செல்லும் வழியில் வழிகாட்டி பலகை இல்லாததால் வெளி மாவட்ட பக்தர்கள் திணறல்

திருப்புல்லாணி :ராமநாதபுரத்தில் இருந்து 9 கி.மீ.,ல் திருப்புல்லாணி உள்ளது. அங்கிருந்து 5 கி.மீ.,ல் கடலில் புனித நீராடும் சேதுக்கரை உள்ள நிலையில் அங்கு செல்வதற்கான வழிகாட்டி பலகை இல்லாததால் வெளி மாவட்ட பக்தர்கள், யாத்ரீகர்கள் திணறுகின்றனர். யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் கூறியதாவது: வைணவ திவ்ய தேசங்களில் 44 ஆக திகழும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு கீழக்கரை -திருப்புல்லாணி செல்லக்கூடிய மும்முனை சந்திப்பில் ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் அலங்கார நுழைவு வாயில் அமைக்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பிரசித்தி பெற்ற சேதுக்கரை கடற்கரைக்கு செல்லக்கூடிய வழிகாட்டி பெயர் பலகை இல்லாத நிலை பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. எனவே அவற்றிற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிதி ஒதுக்கீடு செய்து அலங்கார நுழைவு வாயில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அருகே வழிகாட்டி பெயர் பலகை அமைக்க வேண்டும். சேதுக்கரையில் புனித நீராடி விட்டு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் அதிகம் அமைக்க வேண்டும். ஆடு, மாடுகள் தொல்லை அதிகம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் புரோகிதர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதல் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ