| ADDED : ஜன 02, 2024 05:07 AM
கீழக்கரை: கீழக்கரையில் இருந்து சபரிமலைக்கு 18 ஆண்டுகளாக ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து பாதயாத்திரைமேற்கொண்டு வருகின்றனர்.கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் நாராயணசாமி கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு இருமுடி கட்டி மாலையில் சபரிமலை யாத்திரை பயணத்தை துவக்கினர். மாமலை மகரஜோதி பாதயாத்திரை குழு சார்பில் 15 ஐயப்ப பக்தர்கள் இதில் பங்கேற்கின்றனர்.குருசாமி மனோகர் ஜெயமாரி, சற்குருநாதர்மணிகண்டன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சபரிமலைக்கு நடந்தே செல்கின்றனர். கீழக்கரையில் இருந்து சாயல்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையபுரம், புளியாரை வழியாக கேரளா மலைப்பகுதிக்குள் செல்கின்றனர்.ஜன.12ல் எரிமேலியில்பேட்டை துள்ளலுக்கு தயாராகின்றனர். பின்னர் பெருவழி வழியாக சபரிமலை ஐயப்பனை ஜன.15ல் மகரஜோதி தரிசனத்தில் தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து 15 நாட்கள் நடை பயணத்தில்சுவாமி தரிசனம் செய்யும் ஐயப்ப பக்தர்கள் மறுநாள் வேனில் சொந்த ஊர் திரும்புகின்றனர்.கீழக்கரையில் இருந்து நடந்தே சபரிமலை செல்லும் பக்தர்களிடம் ஏராளமான பொதுமக்கள் ஆசி பெற்றனர்.