உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணியில் தனுர் மாத பூஜை நிறைவு

திருப்புல்லாணியில் தனுர் மாத பூஜை நிறைவு

திருப்புல்லாணி: தனுர் என்பது மார்கழி மாதம் என்றழைக்கப்படுகிறது. மார்கழி மாதம் நிறைவை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.தனுசு ராசியில் கதிரவன் சஞ்சரிப்பதால் தனுர் மாதம் என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள், பத்மாஸனித் தாயார், தெர்ப்பசயன ராமர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பூஜைகளும், ஆண்டாள் சன்னதியில் விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. பக்தர்களுக்கு கேசரி பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை