உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுகாதாரமற்ற டேங்கரில் குடிநீர் வினியோகம்

சுகாதாரமற்ற டேங்கரில் குடிநீர் வினியோகம்

கீழக்கரை: திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடிநீர் டேங்கர்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி மக்கள் பயன்படுத்தும் நிலையில் டேங்கர்கள் சுகாதாரமின்றி உள்ளன.வீடுகள், ஓட்டல்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய தண்ணீரை முறையாக துாய்மை செய்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்கள் கூறியதாவது:பெரிய குடிநீர் டேங்கர்கள் மற்றும் டிராக்டர்கள் மூலமாக வழங்கக்கூடிய டேங்கர்களை முறையாக துாய்மை செய்து அவற்றில் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இந்நிலையில் பெருவாரியான டேங்கர்களில் சுத்தம் செய்யப்படாமல் அடியில் பாசி படர்ந்தும், இரும்பு துகள்கள் கொட்டியும் கிடக்கிறது.இதனால் வடிகட்டி தண்ணீர் பிடிக்கும் போது அவை வெளியே தெரிகிறது. எனவே வெளியிடங்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் சேகரிக்க கூடிய நிலையில் பாதுகாக்கப்பட்ட குடிநீராக குளோரினேசன் செய்தும் உரிய முறையில் பராமரிப்பு செய்தும் குடிநீர் வழங்க வேண்டும். நீரின் மூலமாக பரவும் நோய்களை கட்டுப்படுத்த மருத்துவத் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை