உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெயில் தாக்கத்தால் நவபாஷாணத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவு

வெயில் தாக்கத்தால் நவபாஷாணத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவு

தேவிபட்டினம்,- தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துஉள்ளது. இங்கு தோஷங்களுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும்தினமும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிப்பதால்காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்களின் வருகை குறைந்துள்ளது.நவபாஷாணம் வரும் பக்தர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் அதிகாலை, மாலை நேரங்களில் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர். மாலை நேரங்களில் வெயில் அதிகமாக உள்ளதால் அந்த நேரங்களில் செல்வதை தவிர்த்து வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை