உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கம்பங்களில் விளம்பர பலகைகள்  அகற்ற மின்வாரியம் அறிவுறுத்தல்

 கம்பங்களில் விளம்பர பலகைகள்  அகற்ற மின்வாரியம் அறிவுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் கம்பங்களில் அனுமதியின்றி இணைத்து கட்டியுள்ள கேபிள் ஒயர்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். ராமநாதபும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கணேசன் கூறியிருப்ப தாவது: மின் கம்பங்களில் அனுமதியின்றி எடுத்து செல்லப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள், இணையதள ஒயர்கள், மற்றும் விளம்பர பலகைகளால் மின்வாரிய ஊழியர்கள் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது. இதன் மூலம் மின் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், மேற்கூறிய ஒயர்கள் மற்றும் விளம்பர பலகைகள் அனைத்தை யும் 15 நாட்களுக்குள் அகற்ற கேட்டுக்கொள்ளப் படுகிறது. தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ