உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  டாஸ்மாக் கடைகளை மூடிய ஊழியர்கள் 

 டாஸ்மாக் கடைகளை மூடிய ஊழியர்கள் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 109 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நவ.,26 முதல் அமல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த இரு நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மண்டல மேலாளருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை யடுத்து டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் கடையின் சாவியை ஒப்படைக்க நேற்று ஊர் வலமாக சென்றனர். உரிய அனுமதியின்றி திடீரென தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப் பகுதியில் ஆம்புலன்ஸ்கள் செல்ல சிரமப்பட்டன. மாவட்ட அலு வலகத்தில் மேலாளர் மதிசெல்வன், கடை களில் மதுபாட்டில்களை திரும்ப வாங்குவது செயல்படுத்தவில்லை. அதனால் கடைகளை திறக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பின் மதியம் 1:30 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை