உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜன.4ல் வேலைவாய்ப்பு முகாம்

ஜன.4ல் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 2024 ஜன.4 அன்று பரமக்குடியில் அரசு கலைக் கல்லுாரியில் காலை 09:00 மணி முதல் மதியம் 3:00மணி வரை நடக்கிறது.இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது gmail.comஎன்ற இணையதளம், 04567- 230 160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். முகாமில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.எனவே வேலை தேடுவோர் தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை