உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரியபட்டிணத்தில் சமத்துவ பொங்கல் விழா

பெரியபட்டிணத்தில் சமத்துவ பொங்கல் விழா

பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே குருத்தம்மன்குண்டு கிராமத்தில் அம்மன் கோயில் அருகே எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் பீர்மைதீன் தலைமை வகித்தார். நகர் செயற்குழு உறுப்பினர் கார்மேகம் முன்னிலை வகித்தார்.நகர் செயலாளர் இஜாஸ், ஊராட்சி துணைத் தலைவர் புரோஸ்கான், செயற்குழு உறுப்பினர் ஆசிக், அஸ்கர் அலி உட்பட ஏராளமான எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !