உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

திருவாடானை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

திருவாடானை, : திருவாடானை ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் இலக்கியாராமு தலைமை வகித்தார். துணை தலைவர் மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி, ஊராட்சி செயலர் சித்ரா மற்றும் வார்டு உறுப்பினர்கள் மங்களேஸ்வரி, ராமகிருஷ்ணன், விஜயசாந்தி, சூர்யா, மரகதம், விஜயலட்சுமி, குணசேகரன், மகாலிங்கம் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். சமத்துவ கருத்துக்களை வலியுறுத்தும் வகையிலும், அனைத்து மகளிரின் ஒற்றுமை உணர்வை வளர்த்திடும் வகையிலும், பேச்சுப் போட்டி, கோலப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. துாய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் புத்தாடைகள் வழங்கப்பட்டது. குடிநீர் ஆப்பரேட்டர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ