உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயிர் காப்பீடு பதிவை நவ.30 வரை நீட்டிக்க எதிர்பார்ப்பு: மூவிதழ் அடங்கல் சான்று வழங்க தாமதம்

பயிர் காப்பீடு பதிவை நவ.30 வரை நீட்டிக்க எதிர்பார்ப்பு: மூவிதழ் அடங்கல் சான்று வழங்க தாமதம்

திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டரில் சாகுபடி பணிகள்துவங்கியது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு தொகை வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கபட்டது. காப்பீடு செய்ய நவ.,15 கடைசி நாளாக அறிவித்துள்ளனர். விவசாயிகள் ஆதார் அட்டை, கணினி சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவைகளை தயார் செய்து பதிவு செய்கின்றனர். காப்பீடு செய்ய இன்னும் நான்கு நாட்களே இருப்பதால் ஏராளமான விவசாயிகள் பல்வேறு காரணங்களால் காப்பீடு செய்யமுடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள்ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறியதாவது:விவசாயிகளுக்கு மூவிதழ் அடங்கல் 20 நாட்களுக்கு பிறகு காலதாமதாக வழங்கபட்டது. தற்போது நிலங்களில் களை எடுத்தல், உரமிடுதல் பணி நடக்கிறது. அதற்கான பணியிலும் ஈடுபடமுடியாமல் வி.ஏ.ஓ.,க்களை தேடுவதில் நேரம் வீணாகிறது. சர்வர் பாதிப்பு, தீபாவளிக்கு தொடர்விடுமுறை என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை. எனவே பயிர் காப்பீடு செய்யும் தேதியை நவ.,30 வரை நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனியார் கடைகளில் டி.ஏ.பி. உரம் தட்டுப்பாடாக உள்ளது. உரங்கள்தட்டுபாடு இல்லாமல் கிடைக்க வேளாண்மை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை