உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரம்: பலமுறை புகார் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லாததால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனைவி, கைக்குழந்தை உடன் தீ குளிக்க முயன்ற விவசாயி சக்திராஜனை 33, போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.சூரங்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி சக்திராஜன் 33. பொது மக்கள் பிரச்னைகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து அடிக்கடி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.இந்நிலையில் நேற்று மதியம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சக்திராஜன் அவரது மனைவி இளவரசி, கைக்குழந்தையுடன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீப்பெட்டியை பற்றவைக்க முயன்றார்.இதை கவனித்த கியு பிராஞ்ச் ஏட்டு ராஜேந்திரன் அவர்களை காப்பாற்றும் முயற்சியின் போது கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. சக்திராஜன், அவரது மனைவியை மீட்டு கேணிக்கரை போலீசார் அழைத்துச்சென்றனர்.சக்திராஜன் கூறுகையில், ஊரில் உள்ள குறைகளை கூறுவதால் என்னை கொலை செய்துவிடுவதாக சிலர் மிரட்டுகின்றனர். நிம்மதியாக வாழ முடியவில்லை. இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், போலீசாரிடம் மனுஅளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை