மேலும் செய்திகள்
கூட்டுறவு வாரவிழா விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
5 minutes ago
வெப்ப அலை தடுப்பு ஆலோசனை கூட்டம்
9 minutes ago
சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
10 minutes ago
பெருநாழி: பெருநாழி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வி.ஏ.ஓ.,க்களை தேடி அலைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பயிர் காப்பீட்டிற்கு நவ.,15ல் இருந்து தற்போது நவ.,30 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் ஆர்வமுடன் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். சாகுபடி செய்யப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் பார்வையிட்டு அடங்கல் சான்றிதழ் வழங்குவதற்காக விவசாயிகள் நாடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் முறையாக அலுவலகத்தில் இல்லாமல் வெளி வேலையாக சென்று விடுவதால் அவர்களை தேடி கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். கமுதி பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் வேலவன் கூறியதாவது: பெருநாழி, கோவிலாங்குளம், புதுக்குளம், பொந்தம்புளி, கரிசல்புளி, திருவரை, எருமைகுளம், கொம்பூதி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பயிர் காப்பீடு செய்வதற்காக விண்ணப்பித்திருக்கின்றனர். வி.ஏ.ஓ., மூலமாக அடங்கல் சான்று பெற்று அவற்றை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். விவசாய பணிகளுக்கு மத்தியில் வி.ஏ.ஓ.,க்களை தேடும் நிலை தொடர்ந்து வருகிறது. ஏக்கருக்கு ரூ.2000 வரை அன்பளிப்பாக பெறும் நிலை உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு அலைக்கழிப்பு காரணங்களை கூறி வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முறையாக பயிர் காப்பீடு பதிவதற்கு உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். அரசு வழங்கிய அலுவலக கட்டடத்தில் பணி செய்யாமல் பல வி.ஏ.ஓ.,க்கள் அறை எடுத்து தங்கி பணிகளை செய்து வருகின்றனர். எனவே குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
5 minutes ago
9 minutes ago
10 minutes ago