உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

 மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு டாக்டர்கள் பிரபாகரன், நாகரஞ்சித், யுவனேஷ் கேசவ், சக்தி சரண்யா, அனுகிரஜா, சிவசங்கர் ஆகியோர் பரிசோதனை செய்து விளக்கம் அளித்தனர். மாணவர்களுக்கு அடையாள அட்டை, செவித்துணை கருவி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் பஸ் பாஸ், ரயில் பாஸ் ஆகியவற்றை வாங்குவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது.முகாமில் முதுகுளத்துார் வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் நித்தியா உட்பட சிறப்பாசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ