உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  இலவச மருத்துவ முகாம்

 இலவச மருத்துவ முகாம்

பரமக்குடி: - பரமக்குடி சோமநாதபுரம் சவுராஷ்டிர தேசிய நடுநிலைப் பள்ளியில் அகில இந்திய சவுராஷ்டிரா பவன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ராமச்சந்திரா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், அகில இந்திய சவுராஷ்டிரா பவன், ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவம், கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறந்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மானேஜிங் டிரஸ்டி ருக்மாங்கதன் தலைமை வகித்தார். டிரஸ்டி ராஜன், பொருளாளர் ஹரிஹரன் முன்னிலை வகித்தனர். டாக்டர் ராஜா முகாமை துவக்கி வைத்தார். தேசிய கல்விக் கழக தலைவர் ராமையன், தாளாளர் குப்புசாமி, தலைமை ஆசிரியர் நாகராஜன் ஆகியோர் மாணவர்களை கவுரவித்தனர். முகாமில் கண் பரிசோதனை, மூட்டு வலி, இ.சி.ஜி., ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய் கண்டறியப்பட்டு தேவையானவர்களுக்கு மருந்துகள் வழங்கப் பட்டன. ஆசிரியர் ஜெய பிரகாஷ் ஒருங்கிணைத்தார். டிரஸ்டி சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்