உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கைக்கு கஞ்சா கடத்தல் தலைமறைவானவர் கைது

இலங்கைக்கு கஞ்சா கடத்தல் தலைமறைவானவர் கைது

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமைறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜூலை 5ல் தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடற்கரையில் எஸ்.பி.பட்டினம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு மூடையில் கஞ்சா பார்சல்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 78 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் தெற்கு தெருவைச் சேர்ந்த மாது 31, தொண்டி அருகே புதுக்குடியைச் சேர்ந்த சமயக்கண்ணு 24, புதுக்குடி பாண்டித்துரை 28,ஆகியோரை கைது செய்தனர். இவ் வழக்கில் திருச்சி அண்ணாநகரில் பதுங்கியிருந்த தொண்டியை சேர்ந்த உசைன் 46, போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை