உள்ளூர் செய்திகள்

தொண்டியில் கஞ்சா

தொண்டி:

கஞ்சா விற்ற 3 பேர் கைது

தொண்டி அருகே கஞ்சா விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர். ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.தொண்டியில் டி.எஸ்.பி., (பயற்சி) யாஸ்மின்பானு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது தொண்டியிலிருந்து நம்புதாளைக்கு செல்லும் வழியில் குண்டுகுளம் கரையில் கஞ்சா விற்ற தொண்டி கிழக்கு தெரு நவாஸ்கனி 32, காந்திநகர் டேவிட் 32, தெற்கு தோப்பு அருண்குமார் 23, ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் பையில் மறைத்து வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசை பார்த்ததும்தப்பி ஓடிய தெற்குதோப்பை சேர்ந்த விஜய்யை தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்ற 3 பேர் கைது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ