உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நயினார்கோவில் வாசுகி தீர்த்த குள கரையில் குப்பைமேடு:தீர்வு கிடைப்பது எப்போது

நயினார்கோவில் வாசுகி தீர்த்த குள கரையில் குப்பைமேடு:தீர்வு கிடைப்பது எப்போது

பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளக்கரை குப்பை மேடாகியுள்ளதுடன் கழிவு நீர் கலப்பதால் பக்தர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும் கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளத்தில் நீராடிய பின் தரிசனம் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக குளக்கரையை சுற்றி உள்ளவர்கள் கழிவு நீரை விடுவதுடன் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டும் இடமாக மாற்றியுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக நீரின் தன்மை கெட்டுப் போயுள்ளது. தற்போது மழை நீர் நிரம்பி குளம் ரம்மியமாக காட்சியளிக்கும் சூழலிலும் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் நீராட முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியபோதும் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. தற்போது விவசாய சங்கங்கள் அனைத்தும் இணைந்து குளத்தை மீட்டெடுக்க பல்வேறு வகையில் ஆயத்தமாகி வருகின்றனர். ஆகவே புராதானமாக விளங்கும் வாசுகி தீர்த்த குளத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ