உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்பாலைக்குடி கடற்கரையில் குப்பையால் சுகாதாரக்கேடு

திருப்பாலைக்குடி கடற்கரையில் குப்பையால் சுகாதாரக்கேடு

ஆர்.எஸ்.மங்கலம் : கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி பகுதியில் 600க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளிவரும் குப்பை கழிவுகள் திருப்பாலைக்குடி கடற்கரையோரப் பகுதிகளில் கொட்டப்பட்டு வருவதாலும், கொட்டப்படும் குப்பை உடனடியாக அகற்றப்படாததாலும் கடற்கரைப் பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் கடற்கரை ஓரங்களில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி