உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பணியில் அஜாக்கிரதை கேட் கீப்பர் சஸ்பெண்ட்

பணியில் அஜாக்கிரதை கேட் கீப்பர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில் வந்தபோது கேட்டை மூடாமல் பணியில் அஜாக்கிரதையாக இருந்த கேட்கீப்பர் ஜெய்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற பயணிகள் ரயில் நேற்று முன்தினம் வாலாந்தரை ரயில் நிலையத்தை கடந்து வழுதுார் அருகே வந்த போது ரயில்வே கேட் மூடாமல் இருந்தது. இதனை கவனித்த லோகோ பைலட் நாகராஜன் ரயிலை உடனே நிறுத்தினார். இறங்கி வந்து கேட் கீப்பர் கேட்மூடியதை உறுதி செய்தவுடன் அங்கிருந்து ரயிலை இயக்கினார். இச்சம்பவம் குறித்து லோகோ பைலட் மதுரை கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கேட் கீப்பரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டது உறுதியானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை