மேலும் செய்திகள்
முப்படை மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்
17-Aug-2025
ராமேஸ்வரம் : கவர்னர் இல.கணேசன் மறைவை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் பா.ஜ.,வினர் மலர் அஞ்சலி செலுத்தினர். நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், மரணமடைந்தார். இதனால் தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் துக்கம் அனுசரித்தனர். அதன்படி நேற்று ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் இல.கணேசன் ஆன்மா சாந்தியடைய வேண்டி ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன் தலைமையில் நகர் தலைவர் மாரி, நிர்வாகிகள் ராமு, சங்கிலி முருகன், ஏராளமானோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
17-Aug-2025