உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆட்டோ கவிழ்ந்து விபத்து குழந்தையுடன் பாட்டி பலி

ஆட்டோ கவிழ்ந்து விபத்து குழந்தையுடன் பாட்டி பலி

ராமநாதபுரம்: சரக்கு வாகனத்தில் மோதி, ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், குழந்தையும், பாட்டியும் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே வடகாடு பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி காணாமிர்தம். இவர்களது ஒரு வயது ஆண் குழந்தை தமிழினியன். குழந்தையுடன், சிவா, காணாமிர்தம், அவரது தாய் ராணி, 48, ஆகியோர் நேற்று காலை, 11:00 மணிக்கு ஆட்டோவில், ராமநாதபுரம் மருத்துவமனைக்கு வந்தனர். ராமநாதபுரம் அருகே பெருங்குளம் பகுதியில் வந்த போது, எதிரே வந்த சரக்கு வாகனம் திடீரனெ ஊருக்குள் திரும்பியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சரக்கு வாகனத்தில் மோதி கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தை தமிழினியன், பாட்டி ராணி உயிரிழந்தனர். சிவா, காணாமிர்தம், ஆட்டோ டிரைவர் சுரேந்திரன் படுகாயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ