உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தெப்பக்குளம் நிரம்பியதால் நிலத்தடிநீர் மட்டம் உயர்வு

தெப்பக்குளம் நிரம்பியதால் நிலத்தடிநீர் மட்டம் உயர்வு

ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் தீர்த்த தெப்பக்குளம் நிறைந்தள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நன்னீராக கிடைக்க வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 96 வது திவ்ய தேசம் ஆகும். ராமர் சயன நிலையில் காட்சி தருவது இந்த தலத்தின் சிறப்பு ஆகும். இந்த கோயில் தீர்த்த தெப்பக்குளம் வடகிழக்கு பருவமழையால் நிறைந்துள்ளது. கோயில் தெப்பக்குளம் நிறைந்து கோயில் கோபுரத்துடன் ரம்மியமாக காட்சியளிப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பக்குளம் நிறைந்திருப்பதை கண்டு ரசித்து செல்கின்றனர்.இந்த தெப்பக்குளம் நிறைந்துள்ளதால் திருப்புல்லாணி பகுதியில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அடி ஆழத்தில் சென்றால் கடற்கரை அருகில் உள்ளதால் உவர்ப்பு நீர் தான் கிடைக்கும். தெப்பக்குளம் நிறைந்துள்ளதால் நிலத்தடி நீர் நன்னீராக கிடைக்க வாய்ப்புள்ளது. திருப்புல்லாணி பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி