உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  உயர்கல்வி விழிப்புணர்வு

 உயர்கல்வி விழிப்புணர்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'உயர்கல்வி எங்கள் இலக்கு' என்ற நிகழ்ச்சி தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் தலைமையில் நடந்தது. முதுகலை ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். மாநில உயர்கல்வி வழிகாட்டி ஆலோசகர் ஆறுமுகம், உயர் கல்வியில் சேர்வதற்கான ஆலோ சனைகள், அரசு வழங்கும் சலுகைகள், கல்வி உதவித்தொகை, நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வு களுக்கான ஆலோசனைகள் வழங்கினார். உயர்கல்வி வழிகாட்டி தொடர்பான கண்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர்கள் முருகவேல், முருகன், முபினா கவிதா, பாஸ்கர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை