உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடி ஏற்றம்

ராமநாதசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடி ஏற்றம்

ராமேஸ்வரம்:மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடி ஏற்றப்பட்டது.இக்கோயிலில் தை அமாவாசை, ஆடி திருக்கல்யாணம், மாசி மகாசிவராத்திரி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி விழாவிற்காக நேற்று கோயில் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரக்கம்பத்தில் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க குருக்கள் உதயகுமார் விழா கொடி ஏற்றினார். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. தக்கார் பழனிக்குமார், கோயில் இணை கமிஷனர் சிவராம்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ