உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு நோய் தாக்கம்: வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

 நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு நோய் தாக்கம்: வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 20,573 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவிந்தமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இலை மடக்கு புழு தாக்குதல் நோயால் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. விவசாயிகள் புகாரை தொடர்ந்து அப்பகுதிகளில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாஸ்கர மணியன் தலைமையில், வேளாண்மை அறி வியல் நிலையம் குயவன்குடி இணை பேராசிரியர் ராம்குமார் நோய் தாக்குதலுக்கு உள்ளான நெற் பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின் விவசாயிகளிடம் அவர் கூறியதாவது: நெற்பயிர்களில் இலை களின் ஓரங்களை பிணைத்து அல்லது மடக்கி வைத்து அதனில் இருந்து கொண்டு புழுக்கள் பச்சையத்தை சுரண்டி உண்பதால் நெற்பயிரில் இலை மடக்கு புழு தாக்குதல் நோய் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பயிர்கள் வெண்ணிற சருகு போல் தோற்றமளிக்கும். இளம்பருவத்தில் தாக்குதல் அதிகமாவதால் பயிரின் வளர்ச்சி குன்றிவிடும். இந்த அறிகுறிகள் பயிர்களில் இருந்தால் விவசாயிகள் முதலாவதாக வயல்களில் உள்ள களைகளை அழிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துவதை குறைத்து பரிந்துரைக்கப்பட்ட யூரியாவை வேப்பம் புண்ணாக்குடன் 5:1 என்ற விகிதத்தில் கலந்து மேலுர மாக இட வேண்டும். அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க விளக்கு பொறி அமைத்து மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை உபயோகிக்க வேண்டும். மேலும் குளோரண் டிரானிலி புரோல், கார்டாப் ஹைட்ரோ குளோரைடு, ப்ளூ பெண்டியாமைடு உள்ளிட்ட ரசாயன பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து ஒட்டும் திரவம் சேர்த்து 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளித்து இந்நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்றார். வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு நாகராஜன், வேளாண்மை உதவி இயக்குனர் சுப்ரியா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை