உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்மாய்களில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தல்

கண்மாய்களில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தல்

திருவாடானை: கண்மாய்களில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்துள்ளதால் மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருவாடானை தாலுகாவில் நிறைய கண்மாய்களில் தண்ணீரை உறிஞ்சும் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகிறது. மேலும் செடிகளின் இலைகள், பூக்கள் போன்றவை தண்ணீரில் அழுகி மாசடைகிறது.தாலுகாவில் தொண்டி, தேளூர், சூச்சனி, பெருமானேந்தல் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.இந்த செடிகள் முழுவதும் நிரம்பி உள்ளதால் இவற்றின் இலைகள் தண்ணீருக்குள் விழுந்து அழுகி துர்நாற்றம் வீசுவதோடு தண்ணீரின் நிறத்தையே மாற்றி விடுகிறது. கண்மாய்களில் குளிப்பவர்களுக்கு பல்வேறு தோல் வியாதிகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கண்மாயில் தண்ணீரை உறிஞ்சி விடுவதால் நீரின் அளவு குறைகிறது.இதை தவிர்க்க கண்மாய்களில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற உள்ளாட்சி நிர்வாகங்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !