| ADDED : பிப் 28, 2024 06:07 AM
ராமநாதபுரம், : சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை டி.பி.ஐ., அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இரண்டாவது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வினோத் பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். நிர்வாகி பாலபாண்டியன் வரவேற்றார். ஆசிரியர்கள் கணபதி சங்கர், முகில், கிளமென்ட், தினேஷ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். ஆசிரியர் தர்மராஜ் நன்றி கூறினார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.