உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 85 வயது வாக்காளர்களுக்கு 12டி படிவம் வழங்கல்

85 வயது வாக்காளர்களுக்கு 12டி படிவம் வழங்கல்

திருவாடானை: லோக்சபா தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருவாடானை சட்டசபை தொகுதியில், நேற்று ஓட்டு சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தபால் ஓட்டு பதிவு செய்ய விரும்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 12 டி படிவம் வழங்கினர்.இதுகுறித்து தாசில்தார் கார்த்திகேயன் கூறியதாவது- 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே ஓட்டு போடும் வசதி உள்ளது. அவர்களுக்கு படிவம் 12 டி வழங்கபட்டது. ஓட்டுப்போட விருப்பம் தெரிவிப்பவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகள் பெறப்படும். அவர்கள் ஓட்டுபோட்ட விபரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை