மேலும் செய்திகள்
குண்டாற்றில் சீமை கருவேல மரங்கள்
17-Jun-2025
சிக்கல்: சிக்கல் அருகே இதம்பாடல் ஊராட்சி பாசன கண்மாயில் வரத்து கால்வாயை துார்வார வேண்டும்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பருவமழையால் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. தற்போது கண்மாயின் பெரும்பகுதி தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. நடுப்பகுதியில் மேடாக இருப்பதால் அவற்றில் நாட்டு கருவேல மரங்கள் அதிகளவு உள்ளன.மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்திற்கு செல்லக்கூடிய பறவைகள் இக்கண்மாயிலும் தங்கி ஓய்வெடுத்து செல்கின்றன.400 ஹெக்டேர் கொண்ட இதம்பாடல் கண்மாயின் நான்கு நீர் வரத்து கால்வாய்களையும் முறையாக துார்வார வேண்டும். பல இடங்களில் வரத்து கால்வாய் சேதமடைந்துள்ளது.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதமடைந்த வழித்தட பகுதிகளை சீரமைக்க வேண்டும். இந்த கண்மாய் பாசனத்தை நம்பி பருத்தி, நெல், மிளகாய் உள்ளிட்டவைகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். கோடை விவசாயத்திற்கு கண்மாய் நீர் கை கொடுக்கிறது.எனவே கண்மாயின் கரையோர பகுதிகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
17-Jun-2025