உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் கிடா   

இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் கிடா   

திருவாடானை : திருவாடானை பகுதியில் இனப்பெருக்கத்திற்காக வெள்ளாட்டு கிடாக்கள் வளர்க்கப்படுகிறது.திருவாடானை தாலுகாவில் கால்நடை வளர்ப்பு குடிசைத் தொழில் போல் பெருகி வருகிறது. குறிப்பாக ஆட்டிறைச்சி விற்பனையில் நல்ல லாபம் கிடைப்பதால் கிராமங்களில் ஆடுகள் வளர்ப்பு அதிகரித்துள்ளது. இதில் வெள்ளாட்டு கிடாக்கள் இனபெருக்கத்திற்காக வளர்க்கப்படு கிறது.நேற்று முன்தினம் திருவாடானை வாரச்சந்தைக்கு நான்கு அடி உயர வெள்ளாட்டு கிடா விற்பனைக்கு வந்தது. கிடா உரிமையாளர் மாதவன் கூறுகையில், நான்கு அடி உயரம் கொண்ட இக்கிடா 30 கிலோ எடையுள்ளது. இனபெருக்கத்திற்காக வளர்க்கப்பட்டது. ஊட்டச்சத்து உணவுகளை கொடுத்து வளர்த்தோம். இதே போல் அதிக எடையுள்ள கிடாக்கள் உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி