உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிருஷ்ணர் பிறப்பு விழா

கிருஷ்ணர் பிறப்பு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஜூலை 25 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு மண்டகப்படி தாரர்களின் நிகழ்வுகள் நடக்கின்றன. சக்தி கரகம், தர்மர் பிறப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், நேற்று மாலை விஸ்வகர்மா சங்கத்தினர் சார்பில் கிருஷ்ணர் பிறப்பு விழா நடைபெற்றது. கிருஷ்ணரின் வரலாறு நிகழ்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ