உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம்..  நடவடிக்கை; ராமநாதபுரத்தில் மீண்டும் தகுதிச் சான்று பிரிவு செயல்படும்

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம்..  நடவடிக்கை; ராமநாதபுரத்தில் மீண்டும் தகுதிச் சான்று பிரிவு செயல்படும்

ராமநாதபுரம், : - ராமநாதபுரத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக்கழக தகுதிச் சான்று பிரிவு மூடப்பட்டதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தியதால் மீண்டும் ராமநாதபுரத்தில் செயல்பட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார், ராமநாதபுரம் நகர், புறநகர் ஆகிய 6 கிளை பணிமனைகள் உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்த வாகன தகுதிச் சான்று பிரிவை மூடிவிட்டு இதை விட குறைவான கிளைகளை கொண்ட தேவகோட்டைக்கு மாற்றப்பட்டது. இதனால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். இங்கிருந்து தேவகோட்டைக்கு 110 கி.மீ., பஸ்களை கொண்டு சென்று அதன் பின்பு மீண்டும் ராமநாதபுரம் வந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறுவதால் தேவையற்ற அலைக்கழிப்பு ஏற்படும்.போக்குவரத்து மண்டலமாக ராமநாதபுரம் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் தகுதி சான்றுப்பிரிவு மூடப்பட்டால் மண்டலமாக அறிவிக்கப்படாத நிலை ஏற்படும். இதனை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் தகுதிச்சான்று பிரிவு முன்பு போராட்டம் நடத்தினர். எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடமண தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு எதிரான செயல் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் லிட், நிர்வாக இயக்குநராக இருந்த மகேந்திரகுமார் மாற்றப்பட்டு பொன்முடி நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தொழிற்சங்கத்தின் இரண்டாம் கட்ட போராட்டம் ஆக.16 ல் நடக்க இருந்ததை நிறுத்தி வைத்தனர்.தகுதிச் சான்று பிரிவை தேவகோட்டைக்கு மாற்றம் செய்தது தவறானது. போர்டு மீட்டிங்கில் வைத்து ஒப்புதல் பெற்று மாற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் போர்டு மீட்டிங் நடக்கும் போது அதில் மீண்டும் ராமநாதபுரத்தில் தகுதி சான்று பிரிவு செயல்பட ஒப்புதல் பெறப்படும் என நிர்வாக இயக்குநர் பொன்முடி உறுதியளித்துள்ளார்.இதற்கு சில வாரம் கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டதால் தொழிற்சங்கம் சார்பில் நடக்க இருந்த போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் விரைவில் ராமநாதபுரத்தில் தகுதிச் சான்று பிரிவு செயல்படவுள்ளது. அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் லிட்., சார்பில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ