மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் ரோட்டில் மணல் வாகன ஓட்டிகள் அவதி
05-Jun-2025
ராமநாதபுரம்: திருவாடானை அருகே உள்ள குணபதிமங்களம் கிராம மக்கள் பொது கண்மாயில் மண்ணை திருடி, கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:குணபதிமங்களம் கிராமத்தில் 200க்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் ஜூன் 20 இரவில் ஏராளமான லாரிகளில் மண் அள்ளிச்சென்று கண்மாயை உடைத்து விட்டனர். இது தொடர்பாக திருவாடானை தாசில்தார் வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.எனவே கண்மாய் உடைப்பை சரிசெய்து மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
05-Jun-2025