மேலும் செய்திகள்
சட்ட விழிப்புணர்வு முகாம்
30-Nov-2024
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சிறையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரான முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி சிறைவாசிகளுக்கான லோக் அதாலத் நடந்தது.இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயளாலர் பிரசாத், நீதிபதி பிரபாகரன் பங்கேற்றனர். ராமநாதபுரம் சிறையில் முன்று அமர்வுகளில் 22 பேர் பங்கேற்றனர். இதில் 6 பேருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், சிறைவாசிகள், போலீசார் பங்கேற்றனர்.
30-Nov-2024