உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாத்து வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் மதுரை வியாபாரிகள்

வாத்து வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் மதுரை வியாபாரிகள்

திருவாடானை; மதுரை பகுதியை சேர்ந்த வாத்து வளர்ப்பவர்கள் திருவாடானை பகுதியில் நெல் அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகளை இரைதேட விடுகின்றனர்.கோழி வளர்ப்பிற்கு அடுத்தபடியாக முக்கிய தொழிலாக வாத்து வளர்ப்பு உள்ளது. திருவாடானை பகுதியில் வாத்து வளர்ப்பவர்கள் குறைவு. சில வீடுகளில் குறைந்த எண்ணிக்கையில் வாத்துகளை வளர்க்கின்றனர். மதுரை போன்ற பகுதிகளில் வியாபாரிகள் வாத்து வளர்ப்பதில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர். மதுரை கள்ளந்திரியை சேர்ந்த குமார் கூறியதாவது: மதுரை பகுதியில் விவசாயப் பணிகள் நடப்பதால் வாத்துகளை இரைதேட விட முடியவில்லை. ஆகவே திருவாடானை பகுதிக்கு வந்து குடிசை போட்டு தங்கியுள்ளோம். இங்கு பெரும்பாலான வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அறுவடை செய்த வயல்களில் வாத்துகளை விடுகிறோம். வாத்துகளுக்கு பெரிய அளவில் நோய் தாக்குதல் இருக்காது. ஒரு வாத்து சராசரியாக ஓராண்டுக்கு 150 முட்டைகள் வரை இடும். ஒரு முட்டை ரூ.10க்கும், ஒரு குஞ்சு ரூ.35க்கும் விற்பனை செய்கிறோம். இதனால் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. காலை 7:00 மணிக்கு வயலில் இறக்கிவிடப்பட்டு மாலை வரை மேய்த்து அதன் பிறகு கொட்டிலில் அடைத்து விடுவோம். கேரளா, ஆந்திரா வியாபாரிகள் நாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து முட்டைகளையும், குஞ்சுகளையும் வாங்கி செல்கிறார்கள்.மதுரையிலிருந்து லாரி மூலம் வாத்துகளை கொண்டு வந்தோம். சில வாரங்கள் தங்கியிருந்து விட்டு மீண்டும் மதுரைக்கு சென்று விடுவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை