மேலும் செய்திகள்
பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
4 minutes ago
பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
4 minutes ago
ஐயப்பன் கோயிலில் பஜனை வழிபாடு
5 minutes ago
மோகினி அவதாரத்தில் சுந்தரராஜ பெருமாள்
6 minutes ago
கமுதி: -: கமுதியில் உள்ள விஸ்வகர்மா மடாலயம் உறவின்முறை சார்பில் நுாறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை நடக்கிறது. கமுதி விஸ்வகர்மா மடாலயம் உறவின்முறை பஜனை குழு சார்பில் மார்கழி மாதத்தில் மிருதங்கம், ஆர்மோனியம் உள்ளிட்ட இசைக்கருவிகள் வைத்து தேவாரம், திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசகம், பாசுரங்கள் பாடி ஊர்வலமாக சென்று வழிபட்டு வருகின்றனர். விஸ்வகர்மா பஜனை மடாலயத்தில் துவங்கி காமாட்சி அம்மன், காளியம்மன், விநாயகர், ஆஞ்சநேயர், பெருமாள், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்துமாரியம்மன், உச்சிமாகாளி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு ஊர்வலமாக சென்று பஜனைப்பாடல்கள் பாடி மார்கழி மாத வழிபாடு செய்கின்றனர். விஸ்வகர்மா உறவின் முறையினர், இளைஞர்கள் பலரும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
4 minutes ago
4 minutes ago
5 minutes ago
6 minutes ago