உள்ளூர் செய்திகள்

பால்குடம் ஊர்வலம்

கமுதி; கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் உருவாட்டி காளியம்மன் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது. விழா யாகசால பூஜையுடன் துவங்கி கணபதி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து பூஜை பெட்டியுடன், 108 பால்குடங்கள் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.உருவாட்டி காளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவியப் பொடி உட்பட 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவிலாங்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை