உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தோட்டக்கலை பண்ணைக்கு தவறான வழிகாட்டும் பலகை:  தடுமாறும் மக்கள்

தோட்டக்கலை பண்ணைக்கு தவறான வழிகாட்டும் பலகை:  தடுமாறும் மக்கள்

திருவாடானை: ஓரியூர் தோட்டக்கலை பண்ணைக்கு செல்லும் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள தவறான வழிகாட்டு பலகையால் மக்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவாடானை அருகே ஓரியூரில் அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. நிழல் குடில் அமைத்து பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஓரியூரில் இருந்து எஸ்.பி.பட்டினம் செல்லும் விலக்கு ரோட்டில் இருந்து 2 கி.மீ.,ல் தோட்டக்கலை பண்ணை உள்ளது. இப்பண்ணைக்கு செல்லும் வகையில் வழி காட்டு பலகை ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓரியூரில் இருந்து செல்பவர்கள் இப்பலகையை பார்க்கும் போது தவறான அம்புக்குறியுடன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மரக்கன்றுகள் வாங்க செல்பவர்கள் வழிகாட்டும் பலகையை பார்த்து செல்கிறார்கள். ஆனால் அம்புக்குறி தோட்டக்கலை பண்ணைக்கு எதிர்புறமான தெற்கு திசையை நோக்கி இருப்பதால் வாகனங்களில் வருபவர்கள் குழப்பம் அடைந் துள்ளனர். இதனால் அந்த இடத்தில் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவர்களிடம் வழி கேட்டு செல்கின்றனர். எனவே பலகையில் உள்ள அம்புக்குறியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை