உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  உண்டியல் பணம் திருட்டு; கோயில் பணியாளருக்கு வலை

 உண்டியல் பணம் திருட்டு; கோயில் பணியாளருக்கு வலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய துாய்மை பணியாளரை போலீசார் தேடிவருகின்றனர். மதுரை சிலைமான் பகுதியை சேர்ந்த ராமேஸ்வரம் கோயில் துாய்மைப்பணியாளர் மணிகண்டன் 45. இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரிந்த நிலையில் சில காரணங்களுக்காக 2023ல் ராமேஸ்வரம் கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் இங்கு கோயிலில் உண்டியல் காணிக்கையை சேகரித்து கோயில் திருமண மண்டபத்தில் சிவனடியார் குழு மற்றும் கோயில் ஊழியர்கள் எண்ணினர். காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன், திடீரென உண்டியல் பணத்தை 3 முறை திருடி உள்ளார். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இவர் இதற்கு முன்பும் உண்டியல் பணத்தை திருடி இருக்கலாம் எனவும், தற்போது எவ்வளவு பணம் திருடப்பட்டது என தெரியவில்லை என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் மாரியப்பன், சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் கோயில் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்