| ADDED : பிப் 29, 2024 10:25 PM
ராமநாதபுரம் - ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை மாணவியர் சங்கம்சார்பில் நெட்வோர்க் மற்றும் தானியங்கி கருவிகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சுமதி தலைமை வகித்தார். கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லுாரி உதவிப் பேராசிரியர் பைசல் முக்தர் ஹுசைன், முகமது ஹுசைன் ஆசிப், கோவை சி.டி.எஸ்., நிறுவனத்தின் பொறியாளர் தினேஷ் குமார் கலந்து கொண்டனர். துறைத்தலைவர் ஜாஸ்மின் குணசுந்தரி வரவேற்றார். ஐ.க்யூ.ஏ.சி., ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா, செயலாளர் சர்மிளா, பல்வேறு கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள் 400 பேர் பங்கேற்றனர்.வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவியர் சங்கத் தலைவி விஷாலி நன்றி கூறினார்.