உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

கமுதி; கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது. திட்ட அலுவலர் மங்களநாதன் முன்னிலை வகித்தார். முத்து நகர் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி மைதானம் துாய்மைப்படுத்துதல், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு நாளில் மரக்கன்று நடும் விழா நடந்தது. செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். தலைவர் சண்முகராஜ் பாண்டியன், பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் சிந்துமதி வரவேற்றார். பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் சுகுணாதேவி, ராஜப்ரதா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ