மேலும் செய்திகள்
அரசு அலுவலர்கள் உண்ணாவிரதம்
7 minutes ago
பராமரிப்பின்றி அரசு கால்நடை மருத்துவமனை
7 minutes ago
செயற்கை இழை ஓடுதள பாதை
8 minutes ago
திருவாடானை கோயிலில் கட்டட புனரமைப்பு பணி
9 minutes ago
ராமநாதபுரம்: திருவாடானை அருகே கீழ அரும்பூர் கிராமத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் அரசு பஸ் வர மறுப்பதாக கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். திருவாடானை கீழ அரும்பூர் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. திருவாடானையில் இருந்து குளத்துார் செல்லும் அரசு பஸ் கீழ அரும்பூர் வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பகுதியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் ரோடு அமைக்கப்பட்டது. அதன் பின் எவ்வித பராமரிப்பு பணியும் செய்யாததால் ரோடு பெயர்ந்து ஜல்லி கற்களாக சிதறி கிடக்கிறது. இதனால் அரசு பஸ் ஊருக்குள் வருவதில்லை என கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர். கிராம மக்கள் கூறியதாவது: ரோடு, பஸ் வசதி கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடமும், தாலுகா அலுவலகத்திலும் மனு அளித்து தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குளத்துார் பிரிவு சாலை முதல் கீழ அரும்பூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி வழியாக புதிய தார்சாலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். கா ஞ்சிர ங்குடி அதே போல் காஞ்சிரங்குடி கிராமத்திற்கு மாலை, இரவு நேரத்தில் இயக்கப்படும் அரசு பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டு தற்போது வரை இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் இரவில் 3 கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. கிராமத்திற்கு அரசு பஸ் தினசரி வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
7 minutes ago
7 minutes ago
8 minutes ago
9 minutes ago