உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிக்கலில் பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு

சிக்கலில் பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு

சிக்கல் : சிக்கலில் பயணியர் நிழற்குடை 2011ல் அமைக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் மையப் பகுதியாக சிக்கல் நகர் பகுதி விளங்குகிறது.கடலாடி ஒன்றியக் குழு சார்பில் கிழக்கு கடற்கரை சாலையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் பயணியர் நிழற்குடை கூரை முழுவதும் இரும்பு சீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது நிழற்குடையின் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வண்ணம் பூசப்படாமல் முறையான பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. கடந்த ஆண்டு பஸ் ஸ்டாப்பில் இரும்பு துாணில் வேன் மோதியதில் பஸ் ஸ்டாப்பில் இரும்பு கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது.ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்களும் பயணிகளும் தொடர் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே சிக்கல் ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார், கடலாடி வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை