மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
38 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
38 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
39 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
40 minutes ago
இங்குள்ள கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்திருந்தனர். நடப்பாண்டில் முதுகுளத்துார் தாலுகாவில்100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் விவசாயம் செய்திருந்தனர். போதுமான மழை பெய்த நிலையில் நெற்பயிர்கள் நன்கு வளரத் துவங்கியது.விளைந்த நிலையில்விவசாயிகள் அறுவடைக்கு தயார்நிலையில் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் ஏராளமான கிராமங்களில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கீரனுார் விவசாயி முனியசாமி கூறியதாவது:முதுகுளத்துார் தாலுகா கீரனுார், நல்லுார்,செல்வநாயகபுரம் விளங்குளத்துார், கீழக்குளம், மணலுார்உட்பட 46 வருவாய் கிராமங்களில் நெல் விவசாயம் செய்திருந்தனர். பயிர்கள் ஓரளவு வளரத் துவங்கிய நிலையில் களை எடுப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல் ரூ.500 கூலி கொடுத்து களை பறித்தோம்.நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்தும் வீணாகி உள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்ததால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் சேற்றில் சிக்கி மீண்டும் முளைக்கத் துவங்கியுள்ளது. எனவே அடுத்த ஆண்டு விதை நெல்லுக்கு கூட பயன்படுத்த முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுஉள்ளது. காலதாமதம் செய்யாமல் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.நல்லுார் ஊராட்சி தலைவர் தங்கபாண்டியன் கூறியதாவது:முதுகுளத்துார் தாலுகா கிராமங்களில் கடந்த பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது பெய்த மழையால் 15 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நெற்பயிர்கள்மழைநீரில் மூழ்கி வீணாகியுள்ளது.எனவே வருவாய்த்துறை, வேளாண் துறையினர் கிராமங்கள் முழுவதும் சென்று முறையாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
38 minutes ago
38 minutes ago
39 minutes ago
40 minutes ago