| ADDED : டிச 05, 2025 06:19 AM
தங்கம் வென்று தேசிய போட்டிக்கு தேர்வுபரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த மாணவிகள் மாநில அளவிலான பளு துாக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தேர்வாகினர். நவ., 28ல் துவங்கி 30 வரை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் கல்லுாரியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான பளு துாக்கும் போட்டிகள் நடந்தது. யூத், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர். பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் 4 பேர் 5 பதக்கங்களை வென்றனர். யூத் பெண்கள் 48 கிலோ பிரிவில் ரோஹிணி ஸ்னாட்ஸ் முறையில் 56 கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 67 கிலோ என ஒட்டு மொத்தமாக 123 கிலோ எடை துாக்கி தங்கப்பதக்கம் வென்று தேசிய போட்டிக்கு தேர்வாகினார். இதே பிரிவில் சுபாந்தினி ஸ்னாட்ஸ் முறையில் 41 கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 55 கிலோ என 96 கிலோ எடை துாக்கி வெண்கல பதக்கம் வென்றார். மேலும் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் தேஜா ஸ்னாட்ஸ் முறையில் 61 கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 68 கிலோ என ஒட்டுமொத்தமாக 129 கிலோ துாக்கி ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் வெண்கலம் வென்றார். யூத் 44 கிலோ எடை பிரிவில் ஸ்ரீநிதி ஸ்னாட்ஸ் முறையில் 43 கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 60 கிலோ என 103 கிலோ எடை செய்து வெண்கலம் வென்றார். இவர்களை ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் பளுதுாக்கும் சங்கம், எமனேஸ்வரம் பிரண்ட்ஸ் ஜிம், சாம்பியன் தேக பயிற்சி சாலை ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.